இலங்கை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும்.
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது.
இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது.
இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.
இலங்கையை பற்றி அதிகம் அறியப்படாத சில விடயங்கள் இதோ
- இலங்கையின் வடிவமைப்பை வைத்து அது இந்திய பெருங்கடலின் முத்து (Pearl of the Indian Ocean) மற்றும் இந்திய நாட்டின் கண்ணீர் துளி (Teardrop of India) என அழைக்கப்படுகிறது.
- கிரிக்கெட் தான் இலங்கையில் மிக பிரபலமான விளையாட்டாக இருந்தாலும், இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாகும்.
- இலங்கையானது உலகின் மிகப்பெரிய அளவில் தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
- இலங்கையில் உள்ள சிவனொதிபாத மலை (Adam’s Peak) மிக புனித மலையாக கருதப்படுகிறது.
- இலங்கையில் மொத்தம் பதினோரு பல்கலைகழகங்கள் உள்ளது.
- அந்த நாட்டில் உள்ள மொத்த மக்களில் 93 சதவீதம் பேர் படிப்பறிவு கொண்டவர்களாக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- இலங்கையின் தேசிய கொடியானது மிக பழமையான தேசிய கொடியாக கருதப்படுகிறது.
- இலவங்கப்பட்டையானது இலங்கையில் உருவாகியிருந்தாலும் அது எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
Comments
Post a Comment