பொன்னாங்கண்ணி கீரை





தெளிவான கண்பார்வை வேண்டுமென்றால் பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
அடங்கியுள்ள சத்துக்கள்
இரும்புசத்து - 1.63 மி.கி, கால்ஷியம் - 510 மி.கி, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன.
மருத்துவ பயன்கள்
1. பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.
2. மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
3.இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
4. பொன்னாங்கண்ணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.
5.அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணனி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொ‌ரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.
6.ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்க வல்லது.
7.மூல நோய், மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்த வ‌ல்லது.

Comments

Popular posts from this blog

Malaysia Decides

Sri Lanka Vs Australia - Watch it Live...

Real Estate Investment - FAQ